நூறாண்டுகள் பழமையான இந்த பாலம் அவ்வப்போழுது சீரமைக்கப்படும், என்றாலும் வெள்ளப் பெருக்கின்போது சிதிலமடைந்து விடும். இதன் காரணமாக உயர்மட்ட பாலமாக மாற்றக் கோரி 10 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதற்கு மாற்றாக இருக்கும் திருக்கோவிலூரையும் - மணம்பூண்டியையும் இணைக்கும் உயர்மட்ட பாலம் 1961ம் ஆண்டு கட்டப்பட்டது. 63 ஆண்டுகளை கடந்து விட்டது. தற்போதைய வெள்ளத்தில் தரைபாலம் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆயுட்காலத்தை நிறைவு செய்துள்ள உயர்மட்ட பாலத்தில், போக்குவரத்து அதிகரித்திருப்பதால் பாலத்தின் உறுதித்தன்மையிலும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.