நான்கு முனைச் சந்திப்பு அருகே சந்தேகத்திற்குரிய நபரை பிடித்து விசாரித்ததில், அவரிடமிருந்து 37 லாட்டரி சீட்டுகள் கைப்பற்றப்பட்டன. அவர், திருக்கோவிலுார், கிழக்கு வீதியைச் சேர்ந்த வேலாயுதம் மகன் பாலச்சந்திரன், 47; என்பது தெரியவந்தது. விசாரணையில், அவரது மொபைலில், வரும் 15ம் தேதி வரை குலுக்கல் நடைபெறும் வகையிலான 3,200 லாட்டரி சீட்டுகள் அடங்கிய பி.டி.எஃப். பைல்கள் இருந்ததும், அவர் அதை தினசரி பிரிண்ட் எடுத்து விற்பனை செய்து வந்ததும் கண்டறியப்பட்டது. அவரை கைது செய்த போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்