கடந்த சில நாட்களுக்கு முன், திருவிழாவிற்கு ஊருக்கு வந்த இவர், பெற்றோர்களிடம் பைக் வாங்கி தருமாறு கேட்டுள்ளார். இதனால், பெற்றோர்களுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டது. மனமுடைந்த அவர், நேற்று வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அரகண்டநல்லுார் இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது மற்றும் போலீசார், அய்யப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.