கணவரைக் காணவில்லை என மனைவி போலீசில் புகார்

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பல்லரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்,(60); இவரது மனைவி தாட்சாயினி. இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு நடைபெறுவது வழக்கம். கடந்த 23ம் தேதி இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதனால், மனமுடைந்த ராஜேந்திரன் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து தாட்சாயினி அளித்த புகாரின்பேரில் நேற்று(செப்.28) திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி