இன்று (ஏப்ரல் 5) முதல் நாள் உற்சவத்தில் உலகளந்த பெருமாள் ஹம்ச வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். வேத மந்திரங்கள் முழங்க பெருமாள் எழுந்தருளி நகர் பகுதியில் உள்ள முக்கிய வீதிகளில் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வில் திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். கோவிலின் ராஜகோபுரத்தின் வழியாக உலகளந்த பெருமாள் வரும்போது பக்தர்கள் அனைவரும் கோவிந்தா கோவிந்தா என வழிபட்டனர்.