திருக்கோவிலுார்: தேகளீசபெருமாள் சயன கோலத்தில் அருள்பாலிப்பு

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புஷ்பவல்லி தாயார் அத்தியன உற்சவ நிறைவு விழா நேற்று முன்தினம் (பிப்.3) நடந்தது. 

இதனையொட்டி காலை 9:00 மணிக்கு புஷ்பவல்லி தாயார், தேகளீச பெருமாளுக்கு கண்ணாடி அறையில் விசேஷ திருமஞ்சனம், மாலை 6:00 மணிக்கு தாயார், பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் ஒரே கேடயத்தில் எழுந்தருளி பக்தி உலா நடந்தது. 8:00 மணிக்கு கண்ணாடி அறையில் எழுந்தருளி திவ்யப்பிரபந்த துவக்கம், சேவை சாற்றுமறை, பெருமாள், தாயார் கண்ணாடி அறையில் சயன கோலத்தில் அருள்பாலித்தனர். 03-பிப்ரவரி-2025 நேற்று காலை 9:00 மணிக்கு தாயார் பெருமாள் ஒரே கேடயத்தில் புறப்பாடாகி ஆஸ்தானம் எழுந்தருளினர். 

ஜீயர் தேகளீச ராமானுஜாச்சாரியார் சுவாமிகள் உத்தரவின் பேரில் தேவஸ்தான ஏஜென்ட் கோலாகலன் மேற்பார்வையில், விழா ஏற்பாடுகள் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி