கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் அரகண்டநல்லூர், கொல்லூர், அந்திலி, வீரபாண்டி புத்தூர், பரனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று (ஆகஸ்ட் 1) திடீரென மாலை நேரத்தில் சாரல் மழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.