இந்த கைப்பந்து போட்டியில் சென்னை, விழுப்புரம், தர்மபுரி, தேனி, திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன. கைப்பந்து போட்டி காலை 10 மணிக்கு துவங்கிய நிலையில், மாலை 6 மணியளவில் நடைபெற்ற இறுதி போட்டியில் தருமபுரி மற்றும் கன்னியாகுமரி அணிகள் மோதியதில் தருமபுரி அணி வெற்றிபெற்றது. வெற்றிபெற்ற அணி வீரர்களுக்கு சிறப்பு அழைப்பாளர்கள் பரிசும் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தனர். இந்த நிகழ்வில், 12 மாவட்டங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பார்வையற்றவர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக தீயசக்தி அல்ல, ஜனநாயக சக்தி: வீரபாண்டியன்