திருவெண்ணெய்நல்லுார்: டாஸ்மாக் கடைகளுக்கு எதிர்ப்பு; ஆர்டிஓ சமாதான கூட்டம்

திருவெண்ணெய்நல்லுார் தாலுகா அலுவலகத்தில், பெரியசெவலை மற்றும் கரடிப்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை மாற்றக் கோரி பொது மக்கள் மனு அளித்திருந்தனர். தாசில்தார் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்ற பின்னரும், கடைகள் அகற்றப்படவில்லை. இதனை கண்டித்து டாஸ்மாக் கடைகளுக்கு பா.ம.க., சார்பில் பூட்டிபோடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. 

இப்பிரச்னை தொடர்பாக விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான கூட்டம், நேற்று (டிசம்பர் 29)  நடைபெற்றது. ஆர்.டி.ஓ., முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட டாஸ்மாக் கிடங்கு மேலாளர் ஆதிசக்தி சிவகுமாரி மன்னன், ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர் வேல்முருகன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் மற்றும் பா.ம.க., நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

இதில், பெரியசெவலை டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுப்பது, கரடிப்பாக்கம் டாஸ்மாக் கடையை அகற்றுவது குறித்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர் மற்றும் தாசில்தார் அடங்கிய அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்வது என தீர்மானிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி