இந்த நிலையில் இன்று திமுக சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு கிராமங்களில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி திமுக சார்பில் கண்டாச்சிபுரம் அடுத்த அருணாபுரம் கிராமத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரும், வனத்துறை அமைச்சருமான பொன்முடி கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினார். மேலும், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் மத்திய அரசு ஏழை எளிய குடும்பங்களைச் சார்ந்த மக்களை வஞ்சிப்பதாக குற்றம் சாட்டி கோஷங்களை எழுப்பினர். இந்த நிகழ்வில் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஈரோட்டில் தவெக விஜய் பரப்புரைக்கு அனுமதி!