அவர் பேசுகையில், நான்கு ஆண்டுகால தளபதி மு. க. ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில் மகளிர் விடியல் பயணம், மகளிர் உரிமைத் தொகை, தமிழ்ப் புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழக மக்களின் நலனுக்காக கொண்டுவந்தவர் தளபதி என்று சுளுரைத்தார். அதே போன்று, அதிமுக தான் ஆட்சிக்கு வரும் என எடப்பாடி பழனிசாமி சொல்லிக் கொண்டிருக்கிறார்.
ஆனால், கடந்த நான்காண்டுகளில் நடைபெற்ற 11 தேர்தல்களில் தொடர்ந்து அதிமுக தோல்வியை தழுவியுள்ளதாகவும், அதேபோன்று வரும் சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக தோல்வியை தழுவும் என்று கூறினார். இந்த சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.