திருவெண்ணெய்நல்லுார் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவரை கடந்த 30ம் தேதி இரவு 7: முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர்கள் விசாரித்தபோது வீரணாம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மகன் மாரியப்பன் (21) என்பவர் சிறுமியை கடத்திச் சென்றது தெரியவந்தது. இது குறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில் நேற்று (அக்.2) திருவெண்ணெய்நல்லுார் போலீசார் மாரியப்பன் மீது வழக்குப் பதிந்து இருவரையும் தேடி வருகின்றனர்.