இது குறித்து அங்கு வந்த பெண் நோயாளி ஒருவரின் கணவர் தனது செல்போன் மூலமாக வீடியோ எடுத்துக் கொண்டு அங்கிருந்த, ஆண் செவிலியிடம் கேட்டபோது மருத்துவர் வேறு இடத்திற்கு சென்றிருப்பதாகவும் விரைவில் வந்து விடுவார் எனவும் கூறுகிறார். பின்னர் நீங்களே பெண்களுக்கு ஊசி போடுவீர்களா என கேட்டதற்கு போடுவேன் என்றும் கூறுகிறார்.
பெண் செவிலியர் இல்லாமல் ஆண் செவிலியர்களே பெண்களுக்கு ஊசி போடுவது என்பது பெண் நோயாளிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை மற்றும் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.