திருக்கோவிலூரில் லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு இருந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை அமைக்கப்பட்டு முக்கிய குற்றவாளி என கருதப்பட்ட பாலு என்கிற பாலச்சந்திரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இதனை அடுத்து அவரது வீட்டில் அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 20 லாட்டரி சீட்டுகளை முதலில் பறிமுதல் செய்தனர். பின்னர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். பின்னர் அவரது செல்போனை ஆய்வு செய்தபோது வாட்ஸாப் குழு அமைத்து செல்போன் மூலமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து அவரது செல்போனில் இருந்த 3200 லாட்டரி சீட்டுகள் பிடிஎஃப் பார்மேட்டில் வைத்திருந்தது தெரிய வந்தது. பின்னர் பாலச்சந்திரனை கைது செய்த போலீசார் அவனிடமிருந்த 3220 லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் வாட்சாப் மூலமாக இந்த விற்பனையில் ஈடுபட்டதால் அவரது செல்போனும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி