பெண்ணைவலத்தில் அரளி விதை சாப்பிட்ட கூலி தொழிலாளி இறப்பு

விழுப்புரம் மாவட்டம், பெண்ணைவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரன், 34; கூலித் தொழிலாளி. இவர் சில நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் மாலை 4:00 மணியளவில் மீண்டும் வலி அதிகமானதால் மனமுடைந்த வீரன் அரளி விதை சாப்பிட்டுள்ளார். உடல் நிலை பாதித்து நேற்று அதிகாலை 2:30 மணிக்கு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி