கண்டாச்சிபுரம் வட்டம் ஆலம்பாடியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி மணிகண்டன் (29), திருமணமான 8 மாதங்களில் மதுப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் மனமுடைந்து செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவலறிந்த அரகண்டநல்லூர் போலீசார், அவரது உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.