திருக்கோவிலூர்: நீட்டில் சாதனை படைத்த மாணவருக்கு ஐஜேகே நிர்வாகிகள் பாராட்டு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்துள்ள ஆவியூர் பகுதியை சேர்ந்த திருமூர்த்தி என்ற மாணவன் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் நீட் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்றதை தொடர்ந்து. இந்திய ஜனநாயக கட்சியின் விழுப்புரம் மத்திய மாவட்ட தலைவரும், பார்க்கவ குல முன்னேற்ற சங்கத்தின் மாநில பொருளாளருமான செந்தில்குமார் தலைமையில் நிர்வாகிகள் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். 

உடன் இந்த நிகழ்வில் கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட தலைவர் பொன்முடி, தலைமை கழக பேச்சாளர் சிதம்பரநாதன், திருக்கோவிலூர் ரோட்டரி சங்க பொருளாளர் காமராஜ், ஐஜேகே மணம்பூண்டி ஒன்றிய தலைவர் ரமேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி