இந்நிலையில் இன்றும் மூன்றாவது நாளாக, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர், விளந்தை, மணலூர்பேட்டை, ஜம்பை, மேமலூர், முடியனூர், தகடிபழங்கூர், சந்தைப்பேட்டை, வடக்குநெமிலி, அரியூர், தேவியகரம், ஆலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த கனமழை பெய்து வருவதால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர் இந்த கனமழையால் மானாவரி பயிர் செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மணம்பூண்டி, அரகண்டநல்லூர், தேவனூர், கோட்டமருதூர், பாவந்தூர், கொளத்தூர், எடப்பாளையம், சித்தலிங்கமடம் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலும் கனமழை பெய்து வருகிறது.