திருக்கோவிலூரில் திமுகவினர் கொண்டாட்டம்

திருக்கோவிலூர் நகராட்சிக்கு புதிய பேருந்து நிலையம் அறிவிக்கப்பட்டதை முன்னிட்டு நகர மன்றத் தலைவர் முருகன் தலைமையில் திமுகவினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். இதில் திருக்கோவிலூர் ஒன்றிய கழகச் செயலாளர், கள்ளக்குறிச்சி மாவட்டக் குழுத் துணைத் தலைவர் வழக்கறிஞர் மு. தங்கம், நகரச் செயலாளர் ஆர். கோபிகிருஷ்ணன் உள்ளிட்ட நகர மன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி