விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் படைத்தலைவன் திரைப்படம் நேற்று தமிழகம் முழுவதும் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தை தேமுதிக நிர்வாகிகள் பெருமளவில் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், திருக்கோவிலூர் சீனிவாசா திரையரங்கில் இன்று வெளியான படத்தினை காண வந்த தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கேப்டன் விஜயகாந்த் மார்பளவு சிமெண்ட் சிலையை பேண்ட் வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக திரையரங்கு வரை எடுத்து வந்து, திரையரங்கு வாசலில் தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் அன்னதானம் வழங்கி, கேப்டன் விஜயகாந்த் சிலை முன்பு பத்திற்கும் மேற்பட்ட விஜயகாந்த் ரசிகர்கள் மொட்டை அடித்து படத்தினை காணச் சென்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்