இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் கூரை வீட்டில் ஏற்பட்ட தீயை அணைக்க முயற்சித்தபோது சிலிண்டர் வெடித்து மேலும் தீ பற்றியுள்ளது. தகவல் அறிந்த கண்டாச்சிபுரம் போலீசார் மற்றும் அன்னியூர் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் வீடு முழுமையாக எரிந்து வீட்டில் வைத்திருந்த டிவி, வீட்டுப் பத்திரம் மற்றும் பீரோ உள்ளிட்ட சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் முழுவதுமாகச் சேதமடைந்துள்ளன. இதில் வீட்டில் இருந்தவர்கள் வெளியே சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கண்டாச்சிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி