கடந்த 10 நாட்களுக்கு முன்பு கீழையூர் பகுதியில் RX100 இருசக்கர வாகனம் காணாமல் போயுள்ளது. தற்போது வரை அதை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் கடந்த 30-ஆம் தேதி இரவு திருக்கோவிலூர் வடக்கு வீதியில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றின் முன்பு காட்டுபையூர் கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் ஸ்ப்ளெண்டர் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கடைக்குள் சென்றுள்ளார். பின்னர் வந்து பார்த்தபோது அவரது இருசக்கர வாகனம் காணாமல் போயிருந்தது.
இதனை அடுத்து அதிர்ச்சி அடைந்த அவர் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார். அதில் நபர் ஒருவர் வாகனத்தின் மீது அமர்ந்து சைடு லாக்கை உடைத்து, பின்னர் வாகனத்தை அங்கிருந்து திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.