கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சி பகுதியில், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் தலைமையிலான போலீசார் இன்று (ஆகஸ்ட் 1)வாகன சோதனை ஈடுபட்டனர். அப்பொழுது குடிபோதையில் வாகனத்தில் வந்த இருவரை போக்குவரத்து உதவி ஆய்வாளர் தடுத்து நிறுத்திய போது, தகராறில் ஈடுபட்ட போதை ஆசாமிகள் , உதவி ஆய்வாளரை தாக்க முயற்சிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது