காலை 8:00 மணிக்கு அர்ச்சுனன் தபசு ஏறும் விழாவும், மதியம் 12:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட திரவுபதி அம்மன், மாரியம்மன் தேர் புறப்பட்டது. பக்தர்கள் தேரை வடம் பிடித்து, முக்கிய வீதிகள் வழியாக இழுத்து சென்றனர். மதியம் கூழ் வார்த்தலும், மாலை 4:00 மணிக்கு மாடுபிடி சண்டையும் நடந்தது. தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி