விழுப்புரம்: குளத்தில் மூழ்கி ஒருவர் பலி

அரகண்டநல்லூர் அடுத்த கோட்டை மருதூரை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி, 55; நேற்று முன்தினம் மாலை 6:00 மணியளவில் பசு மாடுகளை மேய்த்து விட்டு, ஊருக்கு அருகில் இருந்த குளத்தில் இறங்கி குளிப்பாட்டிக் கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக, மாடுகள் தட்சிணாமூர்த்தியை தள்ளிவிட்டு கரைக்கு திரும்பிவிட்டன. அருகில் இருந்தவர்கள், திருக்கோவிலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் விரைந்து வந்து அவரது உடலை மீட்டனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி