இதனையடுத்து அதனை சீரமைக்க கடந்த ஏப்ரல் 24ம் தேதி விழுப்புரத்தில் உள்ள ஷோரூமுக்கு இருசக்கர வாகனத்தை கொண்டு சென்று பழுதுபார்த்துள்ளார். அதன் பிறகு கடந்தசில நாட்களாக வாகனத்தை வீட்டில் நிறுத்தி விட்டு நேற்று வாகனத்தை எடுத்துகொண்டு அடுக்கத்திலிருந்து மழவந்தாங்கல் நோக்கி சென்றுகொண்டிருந்தார். மழவந்தாங்கல் டாஸ்மாக் கடை அருகே சென்றபோது வேகம் காட்டும் கருவியில் (ஸ்பீடாமீட்டர்) கரும்புகை வந்துள்ளது. இதனைபார்த்து சுதாரித்துகொண்ட ஹேமசந்தர் வாகனத்தை நிறுத்தி பார்த்தபோது கரும்புகை தீயாக மாறி பைக் முழுவதும் திடீரென தீ பற்றி கொண்டது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஹேமசந்தர் வேட்டவலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். மேலும் அருகில் இருந்தவர்களின் உதவியுடன் தீயை அணைக்க முற்பட்டுள்ளார்.
தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பைக்கில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் வாகனம் முழுவதும் தீயில்எரிந்து சேதமானது. இதுகுறித்து கண்டாச்சிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தீப்பற்றியவுடன் உரிமையாளர் ஹேமசந்தர் முன்கூட்டியே சுதாரித்து கொண்டு பைக்கை விட்டு இறங்கியதால், அதிஷ்டவசமாக உயிர்தப்பினார். கடந்தமாதம் இந்த பைக்கை (ராயல் என்ஃபீல்டு) ேஹமசந்தர் சர்வீஸ் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.