தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்: அரசு மரியாதையுடன் அடக்கம்

திண்டிவனம் அடுத்த கீழ்பாதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வெங்கடேசன் (54), பைக் விபத்தில் மூளைச்சாவு அடைந்ததைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் ஒப்புதலுடன் சிறுநீரகம், கண்கள் உள்ளிட்ட உடல் உறுப்புகள் கடந்த 10-ம் தேதி தானமாக வழங்கப்பட்டன. அவரது உடல் அடக்கத்தின் போது, உடல் உறுப்பு தானம் செய்தவரை கௌரவிக்கும் வகையில் திண்டிவனம் தாசில்தார் ஏழுமலை உள்ளிட்ட வருவாய்த்துறையினர் மலர்வளையம் வைத்து அரசு சார்பில் மரியாதை செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி