திண்டிவனம் வட்டம், எறையானூா் நேதாஜி நகரைச் சோ்ந்த அங்கம்மாள் (55) என்பவர், திண்டிவனத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக தூய்மைப் பணியாளராக வேலை செய்து வந்தார். வெள்ளிக்கிழமை, திண்டிவனம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் எறையானூா் பகுதியில் நடந்து சென்றபோது, அடையாளம் தெரியாத கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.