வங்கக்கடலில் உருவான ‘டிட்வா' புயல் தாழ்வு மண்டலமாக வலுவிழந்த நிலையில், தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக குறைந்துள்ளது. இருப்பினும், விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று காலை கனமழை கொட்டித் தீர்த்தது. திண்டிவனம், மரக்காணம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. திண்டிவனம் - பாண்டி சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தண்ணீரில் வாகனங்கள் பழுதாகி நிற்பதால் மேலும் சிரமம் ஏற்படுகிறது.