பா. ம. க கட்சியின் தலைவராக இருந்து வந்த அன்புமணியின் பதவி நேற்று நிறுவனர் ராமதாசால் பறிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ராமதாசால் கட்சியை விட்டு நீக்கப்பட்ட திண்டிவனம் முன்னாள் நகர செயலாளர் ராஜேஷ் ஆதரவாளர்கள், திண்டிவனம் காமாட்சி அம்மன் கோவில் தெருவிலுள்ள ராமதாசின் வீட்டின் எதிரில் மீண்டும் அன்புமணிக்கு கட்சி தலைவர் பதவி வழங்க கோரி, கோஷம் எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டம் நடத்தியவர்களை அப்புறப்படுத்த வந்த, பா. ம. க. , மாவட்ட செயலாளர் ஜெயராஜிக்கும், அன்புமணி ஆதரவாளர்களுக்கும் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. போலீசார் தலையிட்டதால் மோதல் தவிர்க்கப்பட்டது.