திண்டிவனத்தில் வ. உ. சி. அறக்கட்டளை அலுவலகத்தில் "கப்பலோட்டிய பெருந்தமிழர்" வ. உ. சிதம்பரனார் அவர்களின் 89வது புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது. அறக்கட்டளை பொறுப்பாளர் எம். கதிர்வேலு தலைமையில் நடந்த இந்த நிகழ்வில், பா.ம.க. செயல் தலைவர் திருமதி ஸ்ரீகாந்தி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு வ. உ. சி. அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாநிலக் கொள்கை விளக்க அணித் தலைவர் அ. வியனரசு உள்ளிட்ட பலரும் இதில் பங்கேற்றனர்.