விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே தென் பசியார் பேருந்து நிறுத்தம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய கனமழையால் அடுத்தடுத்து மூன்று சாலையோர மரங்கள் வேருடன் சாய்ந்தன. இதனால் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மற்றும் திண்டிவனம் தீயணைப்பு துறையினர் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.