திண்டிவனம்: கட்டுமானப் பணியில் தொழிலாளி உயிரிழப்பு

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி வட்டம், மாதானம் கிராமத்தைச் சோ்ந்த பா.ஜெயவேல் (56) என்ற கொத்தனாா், திண்டிவனம் வட்டம், கூட்டேரிபட்டு பகுதியில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா். செவ்வாய்க்கிழமை நடந்த இந்த விபத்தில், சகத் தொழிலாளா்களால் மீட்கப்பட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தொடர்புடைய செய்தி