தகவலறிந்த மரக்காணம் தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார், மீனவர்கள் உதவியுடன் பக்கிங்காம் கால்வாயில், இரவு முழுவதும் படகில் சென்று தேடினர். இந்நிலையில் நேற்று காலை 7.00 மணிக்கு கால்வாய் ஓரமுள்ள புதரில் லோகேஷ் சடலத்தை மீட்டனர். அதே பகுதியில் மதியம் 2.50 மணிக்கு விக்ரம் உடல் கண்டெடுக்கப்பட்டது. மாலை 5.30 மணிக்கு மீனவர்கள் சுருக்குமடி வலை போட்டு தேடியதில் சூர்யாவின் உடல் சிக்கியது.
மூவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து மரக்காணம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.