திண்டிவனம்; அமைச்சரவையில் திருமாவளவன் இணைய வேண்டும்.. விசிக தீர்மானம்

திண்டிவனத்தில் நடைபெற்ற விசிக ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக அமைச்சரவையில் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனும் இணைய வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்டச் செயலாளர் தி. திலீபன் தலைமையில், விழுப்புரம் எம். பி. துரை. ரவிக்குமார் முன்னிலையில் நடந்த இக்கூட்டத்தில், திண்டிவனத்தில் வென்று அமைச்சராகியுள்ள வன்னி அரசுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. மேலும், ஜூன் 5-இல் மாவட்டத்திற்கு வரும் கட்சித் தலைவர் மற்றும் அமைச்சருக்குச் சிறப்பான வரவேற்பு அளிப்பது உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

தொடர்புடைய செய்தி