விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பெரும்பாக்கம் சோதனைச்சாவடியில் மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட 280 மதுபாட்டில்கள் மற்றும் ஒரு டாவேரா கார் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த கார்த்திக் (24) என்பவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்.