விழுப்புரம் மாவட்டம் கொந்தாமூரைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி மற்றும் 12ஆம் வகுப்பு மாணவன் காதல் வயப்பட்டு சென்னைக்கு சென்றனர். நள்ளிரவில் திரும்பியபோது பிரம்மதேசம் காவலர் இளங்கோ இருவரையும் பிடித்து விசாரித்துள்ளார். மாணவனை அனுப்பிவிட்டு, மாணவியை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி வழியில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். பின்னர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். திண்டிவனம் மகளிர் போலீசார் காவலர் இளங்கோவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.