திண்டிவனம்: திமுகவுக்கு எதிரான பேனரை அகற்றிய காவல் துறையினர்

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைக் கண்டித்து அதிமுக சார்பில் காந்தியார் திடலில் நடத்தவிருந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்காக வைக்கப்பட்ட பேனரில் திமுகவின் சின்னமான உதயசூரியன் தலைகீழாகவும், 'கருப்பு தமிழகம்' மற்றும் 'ரத்தக்கண்ணீர் மக்கள்' போன்ற வாசகங்களும் இடம்பெற்றிருந்தன. இதனால் அதிருப்தியடைந்த திமுகவினர் போலீசில் புகார் அளித்தனர். திண்டிவனம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேனர்களை அகற்றியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது.

தொடர்புடைய செய்தி