திண்டிவனத்தில் வீட்டில் திருட்டு: போலீசார் வழக்கு பதிவு

திண்டிவனம் ஜே.பி நகரைச் சேர்ந்த பழனி மகன் பார்த்தீபன் (35), சவுக்கு வியாபாரி. இவர், ஜூன் 2-ஆம் தேதி தனது மாடி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் புதுச்சேரியில் உள்ள மாமனார் வீட்டுக்கு சென்றிருந்தார். பின்னர், செவ்வாய்க்கிழமை மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, முன் பக்கக் கதவு, வீட்டினுள் வைக்கப்பட்டிருந்த இரும்பு பீரோ உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. 

மேலும், பீரோவில் வைக்கப்பட்டிருந்த ஒரு பவுன் தங்க நகைகள், அரை கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ. 20 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடுபோயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், திண்டிவனம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி