திருக்கோவிலூர்: சாலை விபத்தில் ஒருவர்; இறப்பு சாலை மறியல்

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்துள்ள காட்டுக்கோயில் பகுதியில், திருக்கோவிலூரிலிருந்து காட்டுக்கோயில் நோக்கி வந்த இருசக்கர வாகனம் சாலையின் வலது புறம் திரும்பிய போது திருவண்ணாமலையிலிருந்து திருக்கோவிலூர் நோக்கி அதிவேகமாக வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த ராஜமூர்த்தி என்பவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். 

இருசக்கர வாகனத்தில் மோதிய காரானது செந்டர் மீடியனில் மோதி மறுமுனைக்குச் சென்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் வேகக்கட்டுப்பாடுகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு போலீசாரின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி