புதுச்சேரி தாகூர் அரசு கலை அறிவியல் கல்லூரி தமிழ்த் துறை பேராசிரியர் கண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, உழைப்பே உயர்வு தரும் எனும் தலைப்பில், பேசினார். அதில், உழைப்பு தான் ஒரு மனிதனை மாமனிதனாக, மேதையாக மாற்றும். உழைப்பு இல்லையேல் மனிதனை பேதையாக்கி விடும். உழைப்பால் உயர்ந்த ஜி. டி. நாயுடு முதல், கனரக வாகன பெண் ஓட்டுநர் ஜோதிமணி, விபத்தில் கால் இழந்தாலும் செயற்கை கால் பொருத்திக் கொண்டு சிறந்த நாட்டிய கலைஞராக வளர்ந்த சுதா சந்திரன் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். அதுபோன்றோர் வாழ்க்கை அனுபவங்கள், நமக்குப் படிப்பினையாக அமைய வேண்டும்' என்றார். ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணிகள் தீவிரம்