முஸ்லிம்களுக்கு அமைச்சர் பதவி: முதல்வருக்கு வாழ்த்து

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 60 ஆண்டு கால திராவிட ஆட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, சிறுபான்மையினரைச் சேர்ந்த முஹமது பர்வேஸ் (தவெக - அறந்தாங்கி தொகுதி) மற்றும் ஷாஜகான் (ஐயூஎம்எல் - இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இது பெருமைக்குரிய விஷயமாகக் கருதி, தமிழக முதல்வரான திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் ஐந்தாண்டுகள் மட்டுமன்றி அடுத்து வரும் அனைத்து சட்டமன்றத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று சிறப்பான ஆட்சியை தமிழக மக்களுக்கு வழங்க வேண்டும் என முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் ச.சு. ஜைனுதின் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி