விழுப்புரம்: ஆசை வார்த்தை கூறி காதலியை ஏமாற்றிய நபருக்கு 10 ஆண்டுகள் சிறை

திருவெண்ணெய்நல்லூர் அருகே 20 வயது பெண்ணைக் காதலித்து திருமணம் செய்வதாக ஏமாற்றி, பின்னர் சாதிப்பெயரைச் சொல்லி இழிவாகப் பேசி திருமணம் செய்ய மறுத்த திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த விஜயகிருஷ்ணன் (29) என்பவருக்கு விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. குற்றவாளிக்கு சிறை தண்டனையுடன் 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்த நீதிபதி, தண்டனை விதிக்கப்பட்ட விஜயகிருஷ்ணனை கடலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி