திண்டிவனம்: வங்கி ஊழியர் வீட்டில் நகை வெள்ளி பொருட்கள் திருட்டு

திண்டிவனம் அருகே அப்பாசாமி நகரில் வசிக்கும் கூட்டுறவு வங்கி செயலாளர் ஸ்ரீதர் வீட்டை மர்மநபர்கள் உடைத்து, பீரோவில் இருந்த 1 பவுன் நகை மற்றும் ½ கிலோ வெள்ளிப் பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். இதன் மதிப்பு சுமார் 2 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது. இதுகுறித்து பிரம்மதேசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி