அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தி. மு. க. ,. ஆட்சி பொறுப்பேற்று மூன்றரை ஆண்டுகள் ஆகிறது. விலைவாசி உயர்வு மற்றும் அனைத்து வரிகளை உயர்த்தியதுதான் திராவிட மாடல் அரசின் சாதனை. சென்னையில் விமான சாகச நிகழ்ச்சியில் உரிய பாதுகாப்பு, போக்குவரத்து, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை அரசு செய்யவில்லை. இதனால் 5 உயிர்கள் பறிபோனது. இதற்கு, ஒவ்வொருவருக்கும் போலீஸ் பாதுகாப்பு போட முடியுமா என சுகாதாரத்துறை அமைச்சர் கேட்கிறார். இந்த அரசு பொறுப்பில்லாமல் இருக்கிறது என்பதற்கும், சீர்கெட்டுள்ளது என்பதற்கும் இதுவே உதாரணம்.
தி. மு. க. , கூட்டணி கட்சியினர் நேரம் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். நீ அனுப்புகிறாயா அல்லது நான் போகட்டுமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கினர். ஆனால் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்து இறந்தவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வழங்குகின்றனர். இவ்வாறு சண்முகம் கூறினார்.