விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியில் புதிய நிர்வாகிகளை நியமிக்க கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, செஞ்சி, மேல்மலையனூர், வல்லம், மயிலம், ஒலக்கூர், மரக்காணம், விக்கிரவாண்டி, காணை தாலுகாக்கள், திண்டிவனம் நகராட்சி, செஞ்சி, மரக்காணம், விக்கிரவாண்டி, அனந்தபுரம் பேரூராட்சிகளுக்கு புதிய வட்டார, நகர, மண்டலப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான விருப்ப மனுக்கள் இன்று (20-ம் தேதி) முதல் 23-ம் தேதி வரை திண்டிவனத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் பெறப்படும்.