கிராம சபாவில் சமூக ஆர்வலர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

திண்டிவனம் அருகே ஏப்பாக்கம் கிராமத்தில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராம சபா கூட்டம் நேற்று(அக்.2) காலை 11: 00 மணிக்கு துவங்கியது. கூட்டத்தில், பங்கேற்ற சமூக ஆர்வலர் ஸ்ரீராமுலு, கிராமத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தராத ஒலக்கூர் வட்டார வளர்ச்சி அதிகாரிகளை கண்டித்து, உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீ குளிக்க முயன்றதால், திடீர் பரபரப்பு நிலவியது. திடுக்கிட்ட கிராம மக்கள், அவரை தடுத்து நிறுத்தினர். அவரிடம், ஒலக்கூர் வட்டார வளர்ச்சி அதிகாரி சிலம்பு செல்வர், கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறி உறுதியளித்தார்.

தொடர்புடைய செய்தி