பின்னர், கலெக்டர் கூறியதாவது: திண்டிவனத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், ரூ. 25 கோடி மதிப்பீட்டில், ஆறு ஏக்கர் பரப்பளவில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில், 50 பஸ் நிறுத்தங்கள், 61 கடைகள், 4 - தானியங்கி பணம் செலுத்தும் இயந்திரங்கள், ஒரு சைவ உணவகம், ஒரு அசைவ உணவகம், ஒரு - பொருட்கள் பாதுகாப்பு அறை அமைக்கப்படுகிறது.
மேலும், 10 - காத்திருப்பு கூடங்கள், 6 நேரக் காப்பகங்கள் மற்றும் காவல்துறை கட்டுப்பாட்டு அறை, 'நான் உங்களுக்கு உதவலாமா அறை' , பஸ் பயண முன்பதிவு அறை, ரயில் முன்பதிவு அறை, ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் ஓய்வு அறை அமைக்கப்பட உள்ளது என்றார்.