முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் முண்டியம்பாக்கத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாலை வந்தார். அங்குள்ள போதை சிகிச்சை மறுவாழ்வு மையத்தை பார்வையிட்டார். 

பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம், காத்திருப்போர் கூடத்தை பார்வையிட்டு, பொதுமக்களிடம் மருத்துவமனை செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார். ஆய்வின்போது, தாசில்தார் செல்வமூர்த்தி, கல்லூரி டீன் கீதாஞ்சலி, ஆர்.எம்.ஓ. ரவிக்குமார், மருத்துவ கண்காணிப்பாளர் கணேஷ்குமார், மனநல மருத்துவத் துறை தலைவர் புகழேந்தி, ஏ.ஆர்.எம்.ஓ. வெங்கடேசன், துறை டாக்டர்கள் செவிலியர்கள் பணியாளர்கள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி