திண்டிவனம்: மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் தவறி விழுந்து பலி

திண்டிவனம் அருகே வெள்ளிமேடுபேட்டை அடுத்த கல்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 25 வயது தனியார் கம்பெனி ஊழியரான மகேஷ், நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்குச் சென்று கொண்டிருந்தார். விநாயகபுரம் மெயின்ரோட்டில் சென்றபோது, திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி